அஸ்ஸலாமு அழைக்கும்! www.ybsguys.blogspot.com இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது... குர்ஆன் வசனம் : "எந்த ஒரு சமுதாயத்தவரும் தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்லாத வரையில் அல்லாஹ் அவர்களை மாற்றுவதில்லை"! . அல்-குர்ஆன்: 13 :11

புத்தாண்டின் கூத்துகளும் கேளிக்கைகளும்



ஜனவரி 1, ஆங்கிலப் புத்தாண்டின் முதல் நாள்...இதிலென்ன சந்தேகம் என்று நினைக்கின்றீர்களா...? இதில்தான் ஒரு சந்தேகம். ஓர் ஆண்டிற்கு ஒருநாள்தானே முதல் நாளாக இருக்க முடியும். ஆனால் நாமோ பல நாள்களை புத்தாண்டாகக் கொண்டாடுகிறோம்.
  1. தை 1 - தமிழ்ப் புத்தாண்டு
  2. யுஹாதி - தெலுங்குப் புத்தாண்டு
  3. முஹர்ரம் 1 - ஹிஜ்ரிப் புத்தாண்டு
இப்படிப் பலப் பலப் புத்தாண்டுகள் கொண்டாடப் படுகின்றன. குறிப்பாக ஆங்கிலப் புத்தாண்டின் மூடத்தனமான வரலாறு பற்றி நாம் தெரிந்து கொள்வது மிக அவசியம்.

ஏனெனில், இந்தப் புத்தாண்டை (?) வரவேற்க உலகெங்கும் டிசம்பர் 31 ஆம் நாள் நடக்கும் கூத்துகளும் கேளிக்கைகளும் வீண் விரயங்களும் கொஞ்சம் நஞ்சமல்ல. சென்னை போன்ற கடற்கரையின் நிலைமை மிக மிக மோசம். மதுக் கடைகளிலும் பெரிய நட்சத்திர ஹோட்டல்களிலும் மதுவிருந்துடன் இரவில் புத்தாண்டை வரவேற்கின்றது ஒரு கூட்டம். மறுநாள் (அதாவது) ஜனவரி 1 காலையில் கோயில்களிலும் தேவாலயங்களிலும் அதே கூட்டத்தைப் பக்திப் பரவசத்துடன் காண முடிகிறது.

ஆண்டுதோறும் இந்தக் கூத்துகள் வாடிக்கையாகி விட்டன.  மக்களும் இதனைக் குறித்துப் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. எனவே இந்த ஆங்கிலப் புத்தாண்டின் வரலாற்றைக் கொஞ்சம் இங்கே அலசுவோம்!

ஜனவரி முதல் டிசம்பர் வரை உள்ள இந்த ஆங்கில ஆண்டு முறை கிறிஸ்தவ காலண்டர் அல்ல.  மாறாக இயேசுவின் பிறப்பிற்கு முன்னரே உள்ள காலண்டர் முறை ஆகும்.
இது பண்டைய ரோம, கிரேக்கர்களின் காலண்டர் முறையாகும். இந்த மாதங்களையு அதற்கான காரணங்களையும் நாம் ஆய்வு செய்தால் அது விளங்கி விடும்.
ஜனவரி : இது ‘ஜானஸ்’ என்ற ரோமக் கடவுளின் பெயர். இந்தப் பெயரை காலண்டரில் கி.மு. 700ஆம் ஆண்டு ஜூலியஸ் ஸீஸர் மன்னர்தான் சேர்த்தார்.
பிப்ரவரி : இது லத்தீன் மொழி வார்த்தை. ரோமத் திருவிழா ‘பிப்ரேரியஸ்’ இன் நினைவாக வந்த மாதம்.
மார்ச் : இதுவும் லத்தீன் வார்த்தை. ரோமக் கடவுள் ‘மார்ஸ்’ இன் பெயராலே அழைக்கப்படுகிறது.
ஏப்ரல் : லத்தீன் மொழியில் ‘ஏப்ரலிஸ்’ என்பதுதான் ஏப்ரல் என்றாகி விட்டது. இதன் பொருள் ‘திறப்பது’ என்பது ஆகும். ஆரம்பத்தில், ஆண்டின் தொடக்கம் ஏப்ரல் மாதத்தில்தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 15ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த போப்பாண்டவர்தான் புத்தாண்டை ஏப்ரலிலிருந்து ஜனவரிக்கு மாற்றினார் . இதனை ஒரு சாரார் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே ஜனவரி 1ஆம் நாளைப் புத்தாண்டின் முதல் நாளாக ஏற்றுக் கொண்ட ஐரோப்பியர்கள் மற்ற ஐரோப்பியர்களைப் பார்த்து ஏப்ரல் 1ஆம் நாள் ‘முட்டாள்களின் தினம்’ என்று அழைக்கத் தொடங்கினர். (ஆகா!! என்ன ஓர் அறிவுப்பூர்வமான வரலாறு?!!) சரி, விடுங்கள்! மேலே படியுங்கள்.
மே : ‘மேயஸ்’ என்ற கிரேக்கப் பெண் கடவுளின் பெயரால் இது அழைக்கப்படுகிறது.
ஜூன் :ரோம கடவுள் ‘ஜு னோ’வின் பெயரால் இம்மாதம் அழைக்கப்படுகிறது.
ஜூலை :  மன்னர் ‘ஜூலியஸ் ஸீஸர் ’ பெயரால் அழைக்கப்படுகிறது.
ஆகஸ்ட் : மன்னர் ‘அகஸ்டிஸ் ஸீஸர் ’  பெயரால் அழைக்கப்படுகிறது.

மீதமுள்ள செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய நான்கு மாதங்களும்   7,8 ,9,10 ஆகிய லத்தீன் எண்களின் பெயரிலிருந்து எடுக்கப்பட்ட வார்த்தைகளாகும். ஆக மாதங்களின் பெயர்களில் பெரும்பாலானவை கடவுளின் பெயர்கள்தாம். இது ஒரு புறமிருக்க...
இந்தக் காலண்டரின் மாதங்களின் நாள்களை முடிவு செய்ததிலும் ‘ஒரு முட்டாள்தனமான’ வரலாறு உள்ளது. 
முதலில் மாதங்களின் நாள்கள் ஜனவரி முதல் டிசம்பர் வரை 30 நாள்களும் 31 நாள்களும் மாறி மாறி வந்தன.  அதாவது ஜனவரி 31 நாள்கள், பிப்ரவரி 30 நாள்கள், மார்ச் 31 ...  இதனை ஜூலியஸ் ஸீஸர் ஏற்றுக் கொள்ளவில்லை. பிப்ரவரி மாதத்திலிருந்து ஒரு நாளைப் பிடுங்கித் தம் பெயரில் உள்ள மாதத்திற்கு -  அதாவது ஜூலை மாதத்திற்குச் சேர்த்தார். அதனால் 30 நாளாக அதுவரை இருந்த ஜூலை மாதம் 31  நாளாக மாறியது. காலண்டர் மொத்தமும் மாற வேண்டியது வந்தது.
ஆகஸ்ட் 30  நாளானது  இப்படிக் கொஞ்ச காலம் போனது. பின்னர் அகஸ்டியஸ் ஸீஸரின் ஆதரவாளர்கள் ஆகஸ்ட் மாதமும் 31 நாளாக இருக்க வேண்டும் என்று கோரினர். மீண்டும் பிப்ரவரி மாதத்திலிருந்து ஒரு நாள் பிடுங்கி ஆகஸ்டில் சேர்க்கப்பட்டது. ஆக இத்தனைக் குழப்பத்திற்குப் பின்னர்தான் நாம் வைத்திருக்கும் இந்தக் காலண்டர் தயாரிக்கப்பட்டது. இது ‘கிரிகோரியன்’ (Gregorian) காலண்டர் என்று அழைக்கப்படுகின்றது.

இப்படி ‘முட்டாள்தனமான’ ஒரு வரலாற்றை மூடிமறைத்து நம்மைப் பின்பற்ற வைத்துள்ள மேற்கத்தியர்களை உண்மையில் ‘அறிவாளிகள்’   என்றே சொல்ல வேண்டும்.ஆக இந்தக் காலண்டருக்கும் இயேசுவிற்கும் எவ்விதத் தொடர்புமில்லை. ஆனால் எப்பொழுது கிறிஸ்தவம் ‘ரோமன் கத்தோலிஸம்’ என்று மாறியதோ, அந்நாள் தொடங்கி, கொள்கை முதல் கலாச்சாரம் வரை அனைத்திலும் ரோம கிரேக்க அநாகரிகம் (Paganism) ஊடுருவி விட்டது. கிறிஸ்தவர்களும் இதனைப் பற்றி கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. 
ஆனால்...
‘ஏகத்துவம்’ என்பதை முழு மூச்சாகக் கொண்டு முழங்கி வரும் முஸ்லிம்களும் இதற்குத் துணை போவது வருத்தத்திற்குரியது!
மேலே சொன்ன கோளாறு முறைக்கு மாற்றமான ஆனால் எவ்விதக் குறைவுமில்லாத ஒரு மாதத்தையும் ஆண்டையும் தீர்மானிக்கும் செயல்திட்டம் நம்மிடமுள்ளது. ஆனால் நம்மில் பலருக்கு இப்போது ஹிஜ்ரி எந்த மாதம், எத்தனையாவது நாள் என்று தெரிவதில்லை.  இஸ்லாமிய இயக்கங்களும் தங்களின் செயல் திட்டங்களை 2010 - 11 என்றுதான் கூறுகின்றன. ஹிஜ்ரி 1432 - 33 என்று சொல்வதில்லை. ரோம, கிரேக்க சிலைகளின் பெயர்களைக் கொண்ட மாதங்களைத் தெரிந்து வைத்திருக்கின்ற அளவு இஸ்லாமிய மாதங்களை நம் குழந்தைகள் தெரிந்து கொள்வதில்லை.  திருமணம் முதற்கொண்டு வாழ்வின் அனைத்து நிகழ்வுகளிலும் இந்த கிரிகோரியன் மாதங்களைத்தான் முன்னிறுத்துகிறோம். இந்நிலை மாற வேண்டும். நம் அன்றாட வாழ்வியலில் தொடர்புடைய அனைத்து நிகழ்வுகளும், அரசின் தொடர்புடைய காரணத்தால் இந்த ஆங்கிலக் காலண்டரின் அடிப்படையில் நடைபெறலாம்;  ஆனால் வீட்டில் குறைந்த பட்சம் ஹிஜ்ரி காலண்டர் ஒன்று இருப்பது அவசியம்.
இப்பொழுது நமக்கு ஓர் ஐயம் ஏற்படலாம்: 'ஹிஜ்ரியின் அடிப்படையில் காலண்டரா? இது சாத்தியமா?'
15ஆம் நூற்றாண்டு வரை உலகில் வாழ்ந்த முஸ்லிம்கள் ஹிஜ்ரிக் காலண்டரைத்தான் பின்பற்றி வாழ்ந்தார்கள். எப்பொழுது ஆங்கிலேயர்கள் கிரேக்கக் காலண்டரை உலக மக்கள் மீது திணித்தார்களோ அப்போது தொடங்கி, முஸ்லிம்கள் ஹிஜ்ரி காலண்டரை மறந்து விட்டார்கள். 1432ஆம் ஆண்டிற்காண ஹிஜ்ரி காலண்டர் தமிழிலே உள்ளது.

இறுதியாக...
இந்த வரலாறு பரவலாக பொதுமக்களிடையே  தெரிய வரவேண்டும் .  
இதன் மூலம் புத்தாண்டின் அநாகரிகமான கலாச்சாரச் சீர்கேடுகளைத் தவிர்க்க முடியும். முஸ்லிம்கள் அதற்கு முன்முயற்சி எடுக்க வேண்டும். அறிவுப்பூர்வமான இஸ்லாமியச் செயல்திட்டங்களை வாழ்வில் நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும்.
- சமரசம்- ஜன 1-15- 2011
Read more »

கூடாதவைகள்!


தொழும் போது கிப்லாவை முன்னோக்கி உமிழக்கூடாது

தொழுகையில் இரு தொடைகளின் இடுக்கில் கைகளை வைக்கக் கூடாது

அடுத்தவர் இடத்தில் அமரக்கூடாது
இடுப்பில் கைவைத்து தொழக்கூடாது
பட்டாடை அனைத்தும் ஆண்களுக்கு தடை
பலன் உறுதிப்படுவதற்கு முன்னர் பழங்களை விற்கக்கூடாது
தொடர் நோன்பிற்கு தடை
வெள்ளிக்கிழமை மட்டும் நோன்பு நோற்கக்கூடாது
மர்ம உறுப்பு வெளியில் தெரியுமாறு ஆடை அணியக்கூடாது\





 o தொழும் போது கிப்லாவை முன்னோக்கி உமிழக்கூடாது
عَنْ أَبِي سَعِيدٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَبْصَرَ نُخَامَةً فِي قِبْلَةِ الْمَسْجِدِ فَحَكَّهَا بِحَصَاةٍ ثُمَّ نَهَى أَنْ يَبْزُقَ الرَّجُلُ بَيْنَ يَدَيْهِ أَوْ عَنْ يَمِينِهِ وَلَكِنْ عَنْ يَسَارِهِ أَوْ تَحْتَ قَدَمِهِ الْيُسْرَى رواه البخاري
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் தொழுகைக்காக நிற்கும்போது தமக்கு முன்புறம் உமிழ வேண்டாம். ஏனெனில் அவர் தொழுகையில் இருக்கும் வரை அவர் அல்லாஹ்விடமே அந்தரங்கமாக உரையாடிக் கொண்டிருக்கிறார். (அதே போல்) அவர் தம் வலப் புறமாகவும் உமிழ வேண்டாம். ஏனெனில், அவரது வலப் புறத்தில் வானவர் ஒருவர் இருக்கிறார். (உமிழ வேண்டிய கட்டாயம் நேர்ந்தால்) தமது இடப் புறமோ அல்லது பாதத்திற்கு கீழேயோ உமிழ்ந்துவிட்டு அதை மண்ணுக்குள் புதைக்கட்டும். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: புகாரி 416, 414, 409, 411, முஸ்லிம் 955)
o தொழுகையில் இரு தொடைகளின் இடுக்கில் கைகளை வைக்கக் கூடாது
790
قَالَ سَمِعْتُ مُصْعَبَ بْنَ سَعْدٍ يَقُولُ صَلَّيْتُ إِلَى جَنْبِ أَبِي فَطَبَّقْتُ بَيْنَ كَفَّيَّ ثُمَّ وَضَعْتُهُمَا بَيْنَ فَخِذَيَّ فَنَهَانِي أَبِي وَقَالَ كُنَّا نَفْعَلُهُ فَنُهِينَا عَنْهُ وَأُمِرْنَا أَنْ نَضَعَ أَيْدِينَا عَلَى الرُّكَبِ رواه البخاري
நான் என் தந்தை (ஸஅத் பின் அபீவக்காஸ் ரளியல்லாஹு அன்ஹு அருகில் நின்று தொழுதேன். அப்போது (ருகூவில்) என் இரு கைகளையும் கோர்த்து என் இரு தொடைகளின் இடுக்கில் வைத்துக்கொண்டேன். அவ்வாறு செய்ய வேண்டாமென என்னை அவர்கள் தடுத்துவிட்டு, நாங்கள் இவ்வாறு செய்து கொண்டிருந்தோம். பின்னர் அவ்வாறு செய்யக்கூடாதென நாங்கள் தடுக்கப்பட்டு, எங்கள் கைகளை முழங்கால்கள் மீது வைக்குமாறு உத்தரவிடப்பட்டோம்'' என்று கூறினார்கள். (அறிவிப்பவர் : முஸ்அப் பின் ஸஅத், நூல்கள்: புகாரி 790, முஸ்லிம் 931)
o அடுத்தவர் இடத்தில் அமரக்கூடாது
6270
عَنْ ابْنِ عُمَرَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ نَهَى أَنْ يُقَامَ الرَّجُلُ مِنْ مَجْلِسِهِ وَيَجْلِسَ فِيهِ آخَرُ وَلَكِنْ تَفَسَّحُوا وَتَوَسَّعُوا رواه البخاري
ஒரு மனிதர், அவர் அமர்ந்திருக்கும் இடத்திலிருந்து எழுப்பிவிடப்பட்டு, அந்த இடத்தில் மற்றொருவர் அமர்வதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடை செய்தார்கள். இதற்கு மாறாக, "நகர்ந்து உட்கார்ந்து மற்றவர்களுக்கும் இடம் கொடுங்கள்'' என்று கூறினார்கள். (அறிவிப்பவர் : இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: புகாரி 6270, 6269, 911, முஸ்லிம் 4391)
o இடுப்பில் கைவைத்து தொழக்கூடாது
1220
حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ حَدَّثَنَا يَحْيَى حَدَّثَنَا هِشَامٌ حَدَّثَنَا مُحَمَّدٌ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ نَهَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُصَلِّيَ الرَّجُلُ مُخْتَصِرًا رواه البخاري
ஒரு மனிதர் இடுப்பில் கை வைத்துக் கொண்டு தொழுவதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடைசெய்தார்கள். (அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: புகாரி 1220, 1219, முஸ்லிம் 948)
o பட்டாடை அனைத்தும் ஆண்களுக்கு தடை
1239 عَنْ الْبَرَاءِ بْنِ عَازِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ أَمَرَنَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِسَبْعٍ وَنَهَانَا عَنْ سَبْعٍ 
وَنَهَانَا عَنْ آنِيَةِ الْفِضَّةِ وَخَاتَمِ الذَّهَبِ وَالْحَرِيرِ وَالدِّيبَاجِ وَالْقَسِّيِّ وَالْإِسْتَبْرَقِ رواه البخاري
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களுக்கு ஏழு விஷயங்களை (ச்செய்யும்படி) கட்டளையிட்டு, ஏழு விஷயங்களை தடை செய்தார்கள். . . . வெள்ளிப் பாத்திரங்களைப் பயன்படுத்துவதிலிருந்தும், (ஆண்கள்) தங்க மோதிரம் அணிவதிலிருந்தும் (கலப்படமில்லாத) பட்டு, அலங்காரப் பட்டு, கஸ் எனும் பட்டு கலந்த (எகிப்திய) பஞ்சாடை, தடித்த பட்டு ஆகியவற்றை அணிவதிலிருந்தும் எங்களை தடைசெய்தார்கள். (அறிவிப்பவர் : பரா பின் ஆஸிப் ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: புகாரி 1239, 5175, 5235, 5650 ,5863, முஸ்லிம் 4194)
o பலன் உறுதிப்படுவதற்கு முன்னர் பழங்களை விற்கக்கூடாது
1486
عن ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا نَهَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ بَيْعِ الثَّمَرَةِ حَتَّى يَبْدُوَ صَلَاحُهَا وَكَانَ إِذَا سُئِلَ عَنْ صَلَاحِهَا قَالَ حَتَّى تَذْهَبَ عَاهَتُهُ رواه البخاري
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பலன் உறுதிப்படுவதற்கு முன்னால் பழங்களை விற்பதைத் தடுத்துள்ளார்கள். அவர்களிடத்தில் "பலன் உறுதிப்படுவது என்றால் என்ன என்று கேட்கப்பட்டது.' (அப்பழங்கள்) பாழாகும் நிலையைக் கடந்துவிடுவதே!'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 1486, 2184, 2194, முஸ்லிம் 3078)
o தொடர் நோன்பிற்கு தடை
1922
عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَاصَلَ فَوَاصَلَ النَّاسُ فَشَقَّ عَلَيْهِمْ فَنَهَاهُمْ قَالُوا إِنَّكَ تُوَاصِلُ قَالَ لَسْتُ كَهَيْئَتِكُمْ إِنِّي أَظَلُّ أُطْعَمُ وَأُسْقَى رواه البخاري
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (நோன்பு துறக்காமல்) தொடர்நோன்பு நோற்றார்கள்;
மக்களும் அவ்வாறு தொடர் நோன்பு நோற்றார்கள். இது மக்களுக்குச் சிரமமாக இருந்தது. அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், மக்கள் தொடர் நோன்பு நோற்கத் தடை விதித்தார்கள். நபித்தோழர்கள், "நீங்கள் (மட்டும்) தொடர் நோன்பு நோற்கிறீர்களே!'' என்று கேட்டார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "நான் உங்களைப் போன்றவன் அல்லன்; (இறைவன் தரப்பிலிருந்து) உண்ணவும் பருகவும் எனக்கு வழங்கப்படுகிறது!'' என்று பதிலளித்தார்கள். (அறிவிப்பவர் : இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள் : புகாரி 1922, 1962, முஸ்லிம் 2010)
o வெள்ளிக்கிழமை மட்டும் நோன்பு நோற்கக்கூடாது
1985
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَا يَصُومَنَّ أَحَدُكُمْ يَوْمَ الْجُمُعَةِ إِلَّا يَوْمًا قَبْلَهُ أَوْ بَعْدَهُ رواه البخاري
உங்களில் எவரும் வெள்ளிக் கிழமைக்கு முன் ஒரு நாளைச் சேர்க்காமல் அல்லது அதற்குப் பின் ஒரு நாளைச் சேர்க்காமல் நோன்பு நோற்க வேண்டாம்! என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: புகாரி 1985, முஸ்லிம் 2102)
o மர்ம உறுப்பு வெளியில் தெரியுமாறு ஆடை அணியக்கூடாது
5822
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ اشْتِمَالِ الصَّمَّاءِ وَأَنْ يَحْتَبِيَ الرَّجُلُ فِي ثَوْبٍ وَاحِدٍ لَيْسَ عَلَى فَرْجِهِ مِنْهُ شَيْءٌ رواه البخاري
ஒரே துணியை உடலில் சுற்றிக்கொண்டு, அதன் ஒரு மூலையை ஒரு தோளில் போட்டுக்கொண்டு, மற்றொரு தோள் பகுதியைத் திறந்தவாறு விட்டுவிடுவதையும் (இஷ்திமாலுஸ் ஸம்மாஉ), ஒரே துணியால் (தம் முதுகையும் முழங்கால்களையும்) போர்த்திக்கொண்டு மர்ம உறுப்பு வெளியே தெரியுமாறு (குத்துக்காலிட்டு) அமர்வதையும் (இஹ்திபா) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடை செய்தார்கள். (அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள் : புகாரி (5822, 367, 368), முஸ்லிம் (4261)
جَزَاكَ اللَّهُ خَيْرًا (மே 2011 தீன்குலப்பெண்மணி)
Read more »

வஹீயின் ஆரம்பம்


இறைச்செய்தியின் ஆரம்பம்
1. 'செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. ஒருவரின் ஹிஜ்ரத் (துறத்தல்) உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அதையே அவர் அடைவார். ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டால் அவளை மணப்பார். எனவே, ஒருவரின் ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டதோ அதுவாகவே அமையும்' என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: என உமர் இப்னு கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு மேடையிலிருந்து அறிவித்தார்கள்.
2. ஹாரிஸ் இப்னு ஹிஷாம் ரளியல்லாஹு அன்ஹு இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! தங்களுக்கு இறைச்செய்தி எவ்வாறு வருகிறது?' எனக் கேட்டதற்கு, 'சில வேளைகளில் அது மணி ஓசையைப் போன்று என்னிடம் வரும். அவ்வாறு வருவது எனக்கு மிகக் கடினமாக இருக்கும். அவர் (வானவர்) கூறியதை நான் நினைவுபடுத்திய நிலையில் அவர் என்னைவிட்டுப் பிரிந்துவிடுவார். மேலும் சில வேளைகளில் அ(வ்வான)வர் ஓர் ஆடவர் போன்று எனக்குக் காட்சியளித்து, என்னுடன் உரையாடுவார். அப்போது அவர் கூறுவதை நினைவிலிருத்திக் கொள்வேன்' என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்' என ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா குறிப்பிட்டார்கள். மேலும்,
"கடும் குளிரான நாள்களில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு வஹீ (இறைச்செய்தி) இறங்குவதை கண்டேன். அவர் (வானவர்) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைவிட்டு விலகிச் செல்லும்போது (குளிரிலும்) அவர்களின் நெற்றியிலிருந்து வியர்வை சொட்டும்" என ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கூறினார்கள்.
3. ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கூறினார்கள்:
"நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குத் துவக்கத்தில் இறைச்செய்தி தூக்கத்தில் தோன்றும் நல்ல கனவுகளிலேயே வந்தது. அப்போது அவர்கள் எந்தக் கனவு கண்டாலும் அது அதிகாலைப் பொழுதின் விடியலைப் போன்று தெளிவாக இருக்கும். பின்னர் தனிமையிலிருப்பது அவர்களின் விருப்பமாயிற்று. ஹிரா குகையில் அவர்கள் தனித்திருந்தார்கள். தங்களின் குடும்பத்தாரிடம் திரும்பி வருவதற்கு முன் பல இரவுகள் (அங்கே தங்கியிருந்து) வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தார்கள். அந்த நாள்களுக்கான உணவைத் தம்மோடு கொண்டு செல்வார்கள். (அது முடிந்ததும்) மீண்டும் (தங்களின் துணைவியார்) கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் திரும்புவார்கள். அதே போன்று பல நாள்களுக்குரிய உணவைக் கொண்டு செல்வார்கள். இந்த நிலை ஹிரா குகையில் அவர்களுக்கு சத்தியம் வரும் வரை நீடித்தது. (ஒருநாள்) ஒரு வானவர் அவர்களிடம் வந்து, 'ஓதும்' என்றார். அதற்கவர்கள் 'நான் ஓதத் தெரிந்தவனில்லையே!' என்றார்கள்.
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்நிலையைப் பின் வருமாறு விளக்கினார்கள்:
"அவர் என்னைப் பிடித்து நான் சிரமப்படும் அளவிற்கு இறுகக்கட்டியணைத்தார். பிறகு என்னைவிட்டுவிட்டு மீண்டும் 'ஓதும்' என்றார். (அப்போதும்) நான் ஓதத் தெரிந்தவனில்லையே! என்றேன். இரண்டாவது முறையும் அவர் என்னைப் பிடித்து நான் சிரமப்படும் அளவிற்கு இறுகக்கட்டி அணைத்து என்னைவிட்டுவிட்டு மீண்டும் 'ஓதும்' என்றார்கள். (அப்போதும்) நான் ஓதத் தெரிந்தவனில்லையே! என்றேன். அவர் என்னைப் பிடித்து மூன்றாவது முறையும் கட்டி அணைத்துவிட்டுவிட்டு,
'படைத்தவனாகிய உம்முடைய இரட்சகனின் திருப்பெயரால் ஓதும்! அவனே மனிதனை 'அலக்'கில் (கருவளர்ச்சியின் ஆரம்பநிலை) இருந்து படைத்தான். ஓதும்! உம்முடைய இரட்சகன் கண்ணியம் மிக்கவன்' என்றார்." மேலும், ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கூறினார்கள்''. பிறகு இதயம் படபடத்தவர்களாக அந்த வசனங்களுடன் (தம் துணைவியார்) குவைலிதின் மகள் கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் நடந்த செய்தியைத் தெரிவித்துவிட்டுத் தமக்கு ஏதும் நேர்ந்து விடுமோ என தாம் உறுதியாக அஞ்சுவதாகவும் கூறினார்கள். அப்போது கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் 'அவ்வாறு கூறாதீர்கள்; அல்லாஹ்வின் மீது ஆணையாக உங்களை ஒருபோதும் அல்லாஹ் இழிவுபடுத்தமாட்டான்; (ஏனெனில்) தாங்கள் உறவினர்களுடன் இணங்கி இருக்கிறீர்கள்; (சிரமப்படுவோரின்) சுமைகளைத் தாங்கள் சுமந்து கொள்கிறீர்கள்; வறியவர்களுக்காக உழைக்கிறீர்கள்; விருந்தினர்களை உபசரிக்கிறீர்கள்; உண்மையான சோதனைகளில் (ஆட்பட்டோருக்கு) உதவி புரிகிறீர்கள்' என்றார்கள். பின்னர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத் தம் தந்தையின் உடன் பிறந்தவரான நவ்ஃபல் என்பவரின் மகன் 'வராக'விடம் அழைத்துச் சென்றார்கள். நவ்ஃபல், அசது என்பவரின் மகனும் அசது, அப்துல் உஸ்ஸாவின் மகனுமாவார்.
'வரகா' அறியாமைக் காலத்திலேயே கிறித்தவ சமயத்தைத் தழுவியவராக இருந்தார். மேலும் அவர் ஹீப்ரு மொழியில் எழுதத் தெரிந்தவராகவும் இஞ்ஜீல் வேதத்தை, ஹீப்ரு மொழியில் அவர் எழுத வேண்டும் என்று அல்லாஹ் நாடிய அளவுக்கு எழுதுகிறவராகவும் கண் பார்வையற்ற பெரும் வயோதிகராகவும் இருந்தார். அவரிடம் கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள், 'என் தந்தையின் சகோதரன் மகனே! உம் சகோதரன் மகன் கூறுவதைக் கேளுங்கள்' என்றார்கள். அப்போது வரகா நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம், 'என் சகோதரர் மகனே! நீர் எதைக் கண்டீர்?' எனக் கேட்டார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தாம் பார்த்த செய்திகளை அவரிடம் கூறினார்கள். (அதைக் கேட்டதும்) வரகா, (நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம்) 'இவர்தாம், மூஸாவிடம் இறைவன் அனுப்பிய 'நாமூஸ்' (ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம்) ஆவார்' என்று கூறிவிட்டு, 'உம்முடைய சமூகத்தார் உம்மை உம்முடைய நாட்டிலிருந்து வெளியேற்றும் சமயத்தில் நான் உயிருடன் திடகாத்திரமான இளைஞனாக இருந்திருக்க வேண்டுமே!' என்றும் அங்கலாய்த்தார்.
அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், 'மக்கள் என்னை வெளியேற்றவா போகிறார்கள்?' என்று கேட்டார்கள். அதற்கவர்கள் 'ஆம்! நீர் கொண்டு வந்திருப்பது போன்ற சத்தியத்தைக் கொண்டு வந்த எந்த மனிதரும் (மக்களால்) பகைத்துக் கொள்ளப்படாமல் இருந்ததில்லை. (நீர் வெளியேற்றப்படும்) அந்நாளை நான் அடைந்தால் உமக்குப் பலமான உதவுவேன்' என்று கூறினார். அதன்பின்னர் வரகா நீண்ட நாள் வாழாமல் இறந்துவிட்டார். இந்த முதற் செய்தியுடன் வஹீ (இறைச்செய்தி) சிறிது காலம் நின்று போயிற்று.
4. 'நான் நடந்து சென்றுகொண்டிருந்தபோது வானத்திலிருந்து ஒரு குரலைக் கேட்டு என் பார்வையை உயர்த்திப் பார்த்தேன். அப்போது ஹிரா குகையில் என்னிடம் வந்த அதே வானவர் வானத்துக்கும் பூமிக்குமிடையே ஓர் ஆசனத்தில் அமர்ந்திருக்கக் கண்டு அச்சமுற்றேன். (வீட்டிற்குத்) திரும்பி வந்து (கதீஜாவிடம்) என்னைப் போர்த்துங்கள் என்றேன். அப்போது, 'போர்வை போர்த்தியவரே எழும்! (மக்களுக்கு) எச்சரிக்கை செய்யும்!' (திருக்குர்ஆன் 74:01) என்பது தொடங்கி 'அசுத்தங்களைவிட்டு ஒதுங்கி விடும்!' என்பது வரை ஐந்து வசனங்களை இறைவன் அருளினான்" என் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: என வஹீ (இறைச்செய்தி) நின்று போயிருந்த இடைக் காலத்தைப் பற்றிக் கூறும்போது ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார். அதன் பின்னர் வஹீ (இறைச்செய்தி) (இறைச்செய்தி) அடிக்கடி தொடர்ந்து வரலாயிற்று என்றும் அவர் கூறினார்.
5. அவரசப்பட்டு உங்கள் நாவை அசைக்காதீர்கள்" (திருக்குர்ஆன் 75:16) என்ற திருக்குர்ஆன் வசனத்தை இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு விளக்கும்போது, 'நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இறைச்செய்தி அருளப்படும்போது மிகுந்த சிரமம் ஏற்பட்டது. இது அவர்களின் உதடுகளை அவர்கள் அசைப்பதன் மூலம் புலனாயிற்று. 'வஹீ (இறைச்செய்தி)யை (மனனம் செய்ய) அவசரப்பட்டு உங்களுடைய நாவை அசைக்காதீர்கள். ஏனெனில் அதனை (உங்கள் நெஞ்சில்) ஒன்று சேர்ப்பதும் (உங்கள் நெஞ்சில்) ஒன்று சேர்ப்பதும் (உங்கள் நாவின் மூலம்) ஓத வைப்பதும் நம்முடைய பொறுப்பாகும். எனவே நாம் அதனைச் செவி தாழ்த்திக் கேட்பீராக - பின்னர் நீர் அதனை ஓதும்படிச் செய்வதும் நம்முடைய பொறுப்பாகும்" (திருக்குர்ஆன் 75:16-19) என்ற வசனங்களை அப்போது அல்லாஹ் அருளினான்' என்று கூறிவிட்டு, 'நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களின் இரண்டு உதடுகளை அசைத்தது போன்று அசைக்கிறேன்' என்று சொல்லித் தங்கள் இரண்டு உதடுகளையும் இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அசைத்துக் காட்டினார்கள்.
இந்த ஹதீஸை இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடமிருந்து ஸயீது இப்னு ஜுபைர் அறிவித்தபோது, 'இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு தங்களின் இரண்டு உதடுகளையும் அசைத்தது போன்று அசைக்கிறேன்' என்று கூறி அசைத்துக் காட்டினார்கள்.
மேலும், இப்னு அப்பாஸ் தொடர்ந்து,
'அதன் பின்னர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வரும்போது (அவர்கள் ஓதுவதை) செவி தாழ்த்திக் கேட்பதை வழக்கமாக்கினார்கள். ஜிப்ரீல் சென்றதும் அவர்கள் ஓதியது போன்றே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் ஓதினார்கள்" என ஸயீது இப்னு ஜுபைர் கூறினார்கள்.
மேற்கூறப்பட்டுள்ள ஹதீஸ்கள் அனைத்தும் புகாரி ஷரீஃப் வால்யூம் 1-இல் ஆரம்பமாக (1-5) இடம்பெற்றுள்ளன.
Read more »