அப்துல் ரகுமான் எம்.பி. தலைமையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கர்கள் நூற்றுக்கனக்கானோர் நெல்லை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
வாக்காளர் பட்டியலில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளர் பெயர் சேர்க்கப்படாததை கண்டித்து நெல்லை மாநகராட்சி தேர்தலை எதிர்த்து வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது. நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் முற்றுகையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் வரும் 17ம் தேதி மற்றும் 19ம் தேதிகளில் 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுகிறது. இத்தேர்தலில் பல்வேறு கட்சிகளும் தனித்து போட்டியிடுவதால் வேட்பாளர்களுக்கு இடையே கடும் போட்டோ போட்டி ஏற்பட்டுள்ளது.நெல்லை மாநகராட்சி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் காதர் பீவி அறிவிக்கப்பட்டார். இவரது பெயர் தென்காசி நகராட்சி வார்டு பகுதியில் இருந்ததால் அந்த பெயரை நீக்கம் செய்ய உரிய படிவம் அளிக்கப்பட்டது. இதனையடுத்து அவரது பெயரை நீக்கி சான்றிதழ் வழங்கப்பட்டது.தொடர்ந்து நெல்லை மாநகராட்சி 44வது வார்டு பகுதியில் தனது பெயரை சேர்க்க காதர் பீவி உரிய விண்ணப்பத்தை வழங்கினார். ஆனால் போதுமான கால அவகாசம் இல்லாத சூழ்நிலையில் இப்பிரச்னை தொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் வேட்பாளர் காதர் பீவி வழக்கு தொடர்ந்தார். இதுதொடர்பாக பரிசீலனை செய்து உரிய சட்டவிதிகளின்படி நடவடிக்கை எடுக்க கோர்ட் உத்தரவிட்டது.இந்த சூழ்நிலையில் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று காலையில் வேலூர் எம்.பி அப்துர் ரகுமான் தலைமையில் கட்சி நிர்வாகிகள் முற்றுகையிட்டனர். இதுதொடர்பாக கலெக்டர் செல்வராஜூடம் பேச்சுவார்த்தையும் நடந்தது. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடப்பதால் இதுதொடர்பாக உடனடியாக மாநகராட்சி தேர்தல் அதிகாரியிடம் தெரிவிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்தார். தொடர்ந்து வேட்பாளர் காதர் பீவி மற்றும் முக்கிய நிர்வாகிகள் நெல்லை மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடந்தது.இந்நிலையில் மீண்டும் வேலூர் எம்.பி அப்துர் ரகுமான் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகையிட்டனர். வேட்பு மனு ஏற்று கொள்ளப்படுமா அல்லது தள்ளுபடி செய்யப்படுமா என்ற சூழ்நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர்.
வேட்பு மனு ஏற்று கொள்ளப்படாவிட்டால் மாநகராட்சி மேயர் தேர்தலை அனைத்து முஸ்லிம் அமைப்புகளும் புறக்கணிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோஷங்களை எழுப்பினர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.இப்பிரச்னை தொடர்பாக வேலூர் எம்.பி அப்துர் ரகுமான் கூறியதாவது:தென்காசி நகராட்சி பகுதியில் காதர் பீவியின் பெயர் நீக்கப்பட்டு நெல்லை மாநகராட்சி பகுதியில் சேர்க்க 26ம் தேததி விண்ணப்பம் வழங்கப்பட்டது. நேற்று முன்தினம் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய கடைசி நாளாகும். ஆனால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 7 நாட்கள் கால அவகாசம் வேண்டும் என்று தேர்தல் ஆணைய உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதனை எதிர்த்து மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உரிய ஆணை பெறப்பட்டும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் சிறுபான்மை மக்களின் பிரதிநிதியாக மேயர் வேட்பாளர் பதவிக்கு காதர் பீவி போட்டியிட முடியாத சூழ்நிலை உள்ளது. இதுசம்பந்தமாக அனைத்து தரப்பினருடன் ஆலோசனை நடத்தி நெல்லை மாநகராட்சி மேயர் தேர்தல் தொடர்பாக வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், மாநகராட்சி பகுதிகளில் முஸ்லிம் மக்கள் மற்றும் சிறுபான்மை மக்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்யவும் முடிவு செய்துள்ளனர். எனவே, இதுதொடர்பாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு எம்.பி கூறினார்.இதில் நிர்வாகிகள் துராப்ஷா, ஷாபி, மீரான், முகம்மது அலி, திவான் மைதீன், ஹைதர் அலி உட்பட பலர் கலந்து கொண்டனர்.இதற்கிடையில் வேட்பாளர் காதர் பீவியின் வேட்பு மனு மீதான பரிசீலனை மாநகராட்சி மேயர் அஜய் யாதவ் முன்னிலையில் நடந்தது. இதில் காதர் பீவியின் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க இன்று (1ம் தேதி) காலை 11 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதற்குள் பெயரை சேர்க்காவிட்டால் காதர் பீவியின் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தகவல் : நல்லூரான்

0 comments:
Post a Comment