- பகிர்க
- நண்பருக்கு அனுப்ப
- பக்கத்தை அச்சிடுக

நீரின் அடியில் மூழ்கிக் கிடக்கும் கப்பல்
அட்லாண்டிக் கடலில் 150 மில்லியன் ஸ்டார்லிங் பவுண்டுகள் பெறுமதியான 200 டண்கள் வெள்ளிப் பாளங்களுடன் 1941 ஆம் ஆண்டில் பெருங்கடலில் மூழ்கிய கப்பல் ஒன்று தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் உலகப்போரின் போது பிரிட்டனுக்குச் சொந்தமான இந்த எஸ் எஸ் கயர்சோப்பா என்னும் கப்பல் ஜேர்மனியின் யூ-போட் என்னும் தாக்குதல் கலங்களால் தாக்கப்பட்டு, அட்லாண்டிக் கடலில் மூழ்கடிக்கப்பட்டது.
இந்தியாவில் இருந்து 200 டண்கள் வெள்ளிப் பாளங்களை ஏற்றிக்கொண்டு லிவர்பூல் துறைமுகத்துக்கு விரைந்த இந்தக் கப்பல் தாக்குதலுக்கு உள்ளாகி அயர்லாந்து கடற்கரைக்கு 300 மைல்கள் தொலைவில் மூழ்கடிக்கப்பட்டது.அந்தக் காலகட்டத்தில் பிரிட்டிஷ் கப்பல்கள், படைகளுக்கான விநியோக கலங்கள் இந்தப் பகுதிகளில் ஜேர்மனிய குண்டுத்தாக்குதலுக்கு உள்ளாவது வழமை.

தற்போது அமெரிக்காவின் கடல்வள தேடல் நிறுவனமான ஒடிசி மரைன் எக்ஸ்புளொரேஷன் நிறுவனத்தால், இந்தக் கப்பலின் இருப்பிடம் கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது.
இந்தக் கப்பலில் இருக்கும் வெள்ளிப்பாளங்கள் மீட்கப்பட்டால், அவற்றின் பெறுமதி கிட்டத்தட்ட 150 மில்லியன் ஸ்டார்லிங் பவுண்டுகளாக இருக்கும் என்று அந்த நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. இருந்தபோதிலும் அவற்றை மீட்கும் பணிகளும் மிகவும் சிரமமானவை ஆகும். சிறப்பு நீர்மூழ்கி இயந்திரங்கள் இதற்கு பயன்படுத்தப்பட வேண்டும்.
ஆகவே இந்த கடற் பொக்கிஷம் மீட்கப்பட்டால், அதன் 80 வீதம் மீட்கும் நிறுவனத்துக்கு வழங்கப்பட வேண்டும் என்று அது, பிரிட்டிஷ் போக்குவரத்து துறையுடன் ஒப்பந்தம் ஒன்றைச் செய்துள்ளது.
by Mteef
Blog RSS Feed
Via E-mail
Twitter
Facebook



0 comments:
Post a Comment