அஸ்ஸலாமு அழைக்கும்! www.ybsguys.blogspot.com இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது... குர்ஆன் வசனம் : "எந்த ஒரு சமுதாயத்தவரும் தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்லாத வரையில் அல்லாஹ் அவர்களை மாற்றுவதில்லை"! . அல்-குர்ஆன்: 13 :11

ஒருநாள் போட்டியை மாற்றியமைக்க சச்சின் யோசனை



சச்சின் டெண்டுல்கர்
சச்சின் டெண்டுல்கர்
உலக அளவில் கிரிக்கெட் விளையாட்டில் பிரபலமாக இருக்கும் அணிக்கு ஐம்பது ஓவர்களைக் கொண்ட ஒரு நாள் போட்டிகள் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று சச்சின் டெண்டுல்கர் கோரியுள்ளார்.
கிரிக்கெட் உலகில் டெஸ்ட் போட்டிகள் மற்றும் அணிக்கு 50 ஓவர்களைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் ஆகியவற்றில் மிக அதிகமான ஓட்டங்களை எடுத்துள்ள இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைமைச் செயல் அதிகாரியான ஹரூன் லோகார்ட்டுக்கு எழுதிய கடிதம் ஒன்றிலேயே இந்த கருத்தை முன்வைத்துள்ளார்.
இரு அணிகளுக்கும் தலா ஐம்பது ஓவர்களை ஆடும் வகையில் தற்போது இருக்கும் வடிவத்தை மாற்றி அணிக்கு 25 ஓவர்களைக் கொண்ட இரு இன்னிங்ஸாக ஒரு நாள் போட்டிகள் மாற்றியமைக்கப்பட வேண்டும் என டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
அதாவது நூறு ஓவர்களைக் கொண்ட ஒருநாள் போட்டியானது அணிக்கு 50 ஓவர்களைக் கொண்ட போட்டியாக இல்லாமல், ஒவ்வொரு அணியும் 25 ஓவர்களைக் கொண்ட இரண்டு இன்னிங்ஸ் ஆடும் வகையில் இந்தப் போட்டிகள் மாற்றியமைக்கப்பட வேண்டும் என டெண்டுல்கர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் விளையாட்டில் இருக்கும் மூன்று வடிவங்களான டெஸ்ட் கிரிக்கெட், அணிக்கு ஐம்பது ஓவர்களைக் கொண்ட ஒருநாள் போட்டி மற்றும் அணிக்கு 20 ஓவர்களைக் கொண்ட போட்டி ஆகியவை எப்படி ஒன்றோடு ஒன்று இணைந்து இருக்கலாம் என்பது பற்றியும், அவை கிரிக்கெட் விளையாட்டின் மதிப்பையும் எப்படி உயர்த்தும் என்பது பற்றியும் தனக்குள் உதித்த எண்ணங்களையே இந்தக் கடிதம் மூலம் தான் முன்வைத்திருப்பதாகவும் சச்சின் ஐ சி சி க்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
ஒருநாள் போட்டிகளை 25 ஓவர்களைக் கொண்ட நான்கு பகுதியாக பிரிக்கும் போது, நாணய சுண்டில் வெற்றி பெரும் அணிக்கு கிடைக்கும் அனுகூலங்களை சமன்படுத்தும் வகையிலும், இருதரப்புக்கும் நியாயமான வாய்ப்புகள் கிடைக்கும் வகையிலும் அமையும் எனவும் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
ஆடுகளத்தின் நிலை மற்றும் காலநிலைகள் காரணமாக ஒரு ஆட்டத்தின் முடிவு நாணய சுண்டின் மூலம் நிர்ணயிக்கப்படும் நிலையை, போட்டிகளை 25 ஓவர்களைக் கொண்ட நான்கு பகுதிகளாக பிரிக்கும் போது தவிர்க்கலாம் எனவும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
அதே போல பவர் பிளே முறையிலும் சில மாற்றங்கள் தேவை எனவும் அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

by Mteef

1 comments:

Thouseef said...

Nice..............

Post a Comment